வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் விளக்கு எரிகிறது ஆர்டிஐ தகவல்


வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் விளக்கு எரிகிறது ஆர்டிஐ தகவல்
x
தினத்தந்தி 23 July 2017 10:20 AM IST (Updated: 23 July 2017 10:19 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் விளக்கு எரிகிறது என ஆர்டிஐ தகவலில் தெரியவந்து உள்ளது.



மும்பை,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பிழையேற்படுத்தாதது என தேர்தல் ஆணையம் ஆணித்தரமாக கூறிவரும் நிலையில் ஆர்டிஐ மூலம் சனிக்கிழமை பெறப்பட்ட தகவலில் மராட்டியத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புல்தானாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது சுல்தான்பூர் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தால் தாமரை சின்னத்தில் வாக்குப்பதிவானதை குறிக்கும் விளக்கு எரிந்து உள்ளது. 

 தேங்காய் சின்னம் அங்கு சுயேட்சையாக போட்டியிட்டவருக்கு ஒதுகீடு செய்யப்பட்ட சின்னம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுல்தான்பூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் வருவாய் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அனில் கால்காய் என்பவர் ஆர்டிஐ மனுவின் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு விசாரணை அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் பதிலாக கிடைத்து உள்ளது. சுயேட்சை வேட்பாளர் அஷாதி அருண் புகார் தெரிவித்தது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆர்டிஐ மனுவை தாக்கல் செய்தார். 

புல்தானா மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் தேர்தல் விவகாரங்கள் துறை அளித்து உள்ள பதிலில் சுல்தான்பூரில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் (எண்-56) வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் இடத்தில் இருந்த சுயேட்சை வேட்பாளருக்கான தேங்காய் சின்னத்தில் வாக்களித்தால், 4-வது இடத்தில் இருந்த பா.ஜனதா வேட்பாளரின் தாமரை சின்னத்தில் எல்இடி விளக்கு எரிந்தது, வாக்கு அவருக்கு சென்று உள்ளது என கால்காய் விளக்கம் அளித்து உள்ளார். 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு இருப்பது தொடர்பாக வாக்காளர்கள் காலையில் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அதனை நிராகரித்து உள்ளனர். மதியமும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர் தேர்தல் அங்கு ரத்து செய்யப்பட்டது. தவறாக வாக்குகள் சென்ற இயந்திரம் சீல் வைக்கப்பட்டது. பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின் நெருக்கடியை அடுத்து அந்த வாக்குச்சாவடிக்கு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடந்தது என ஆர்.டி.ஐ. பதிலில் தெரியவந்து உள்ளது. 

இந்த வழக்கானது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி என்பதை உறுதி செய்து உள்ளது என கூறிஉள்ளார் கால்காய். 

வாக்காளர்களால் இந்த தவறு அதிகாரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதிகமான வாக்காளர்கள் இதனை உறுதி செய்து உள்ளனர். மாவட்ட அதிகாரிகளும் மீண்டும் உறுதி செய்து உள்ளனர், அறிக்கையானது அரசுக்கு மாவட்ட ஆட்சியாளர்க்கு சென்று உள்ளது என குறிப்பிட்டு உள்ளார் கால்காய். 

Next Story