விமான பணிப்பெண்ணாக தொடர்ந்து பணியாற்றுவேன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மகள் பேட்டி


விமான பணிப்பெண்ணாக தொடர்ந்து பணியாற்றுவேன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மகள் பேட்டி
x
தினத்தந்தி 26 July 2017 4:45 AM IST (Updated: 26 July 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் புதிய ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்தின் ஒரே மகள் சுவாதி. அவர், ஏர் இந்தியா நிறுவனத்தில் கேபின் மேற்பார்வையாளராக (விமான பணிப்பெண்) பணியாற்றி வருகிறார்.

புதுடெல்லி,

சுவாதி டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பள்ளி படிப்பையும், பின்னர் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் உளவியல் படித்து பட்டமும் பெற்றவர்.

தந்தை ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14–வது ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தன்னை சந்தித்த நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–

நான் தொடர்ந்து விமான பணிப்பெண்ணாக பணிபுரியவே விரும்புகிறேன். எனது தந்தை நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வந்து இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய கடினமாக உழைப்பே காரணம். எனது தந்தை எப்போதும் குடும்பத்தினரிடம், அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும் என்று வலியுறுத்துவார். அதனால்தான் எங்களது குடும்பத்தினர் அனைவருமே இன்று சொந்தக் காலில் நிற்கிறோம். எங்களுக்கென்று தனி அடையாளத்தை கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story