வெளிநாட்டில் இருந்து திரும்பிய மகன் மக்கிய நிலையில் தயாரின் எலும்புக்கூடு


வெளிநாட்டில் இருந்து திரும்பிய மகன் மக்கிய நிலையில் தயாரின் எலும்புக்கூடு
x
தினத்தந்தி 7 Aug 2017 10:48 AM GMT (Updated: 7 Aug 2017 10:47 AM GMT)

மும்பையில் தனியாக வசித்து வந்த 63 வயது பெண்மணி ஒருவரின் உடல் மக்கிப்போன நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது.

மும்பையின் அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவரது மகன் ரிதுராஜ், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், தனது தாயை பார்ப்பதற்காக நேற்று மும்பை வந்துள்ளார். வீட்டிற்கு வந்த இவர் வீட்டின் கதவினை தட்டியுள்ளார், ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, பூட்டு சரி செய்பவரை அழைத்து வந்து பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கதவினை திறந்து உள்ளே சென்றபோது மக்கிப்போன நிலையில் எலும்புக்கூடொன்று கிடந்துள்ளது.

இதனை பார்த்து கதறி அழுதுள்ளார், தாய் ஆஷா எப்போது எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியவரவில்லை, இது இயற்கை மரணமா, தற்கொலையா, கொலையா என்பதும் தெரியவில்லை.

விரைவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், மரணம் குறித்து அருகில் வசிப்பவர்களிடம் போ  சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story