புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் பணியாற்ற வேண்டும்: பிரதமர் மோடி


புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் பணியாற்ற வேண்டும்: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 9 Aug 2017 7:03 AM GMT (Updated: 9 Aug 2017 7:07 AM GMT)

2022 ஆம் ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுகையில் தெரிவித்தார்.


புதுடெல்லி,

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த இயக்கம் துவங்கப்படதன் 75-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து பாராளுமன்றத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:- “ சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முக்கியமானது. இந்த இயக்கத்தில் பங்கு பெற்ற  பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். வெள்ளையனே வெளியேறு போன்ற வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வுகளை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டம் இந்தியாவை வலிமைப்படுத்தியது.

 நமது சுதந்திரம் நமது நாட்டை மட்டும் குறிக்கவில்லை. உலகின் மற்ற பகுதிகளிலும் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழியை காட்டியது. நம் நாட்டு மக்களின் நம்பிக்கையுடன் மகாத்மா கனவை நிறைவேற்றுவோம். 

ஊழலின் பாதிப்பு நமது நாட்டு வளர்ச்சியை பாதித்துள்ளது. ஊழலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வறுமை, கல்வியறிவின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை  மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். இந்தியா 75வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தின்போது, 1942 முதல் 1947 காலகட்டத்தில் இருந்த அதே உத்வேகத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் பணியாற்ற வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.


Next Story