குஜராத்:8 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் சோனியா காந்தி நடவடிக்கை

குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வகேலா உட்பட 8 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தில் 3 மாநிலங்களவை காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி, அமித்ஷா வெற்றிபெற்றனர். 3-வது இடத்திற்கான போட்டியில் பல்வந்த்சிங் ராஜ்புத் (காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்) ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர். நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அகமது படேல் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கட்சி மாறி ஓட்டு போட்டதாக குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வகேலா உட்பட 8 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால் காங். தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Tags :
Next Story