டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் - ஜே.பி.நட்டா


டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் - ஜே.பி.நட்டா
x
தினத்தந்தி 9 Aug 2017 5:13 PM GMT (Updated: 9 Aug 2017 5:13 PM GMT)

டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் டெங்கு, மலேரியா நோய்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடம் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், கேரள மாநிலங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து அவர் டெங்குவால் பாதிக்க பட்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதி அளித்தார்.

Next Story