2022-க்குள் புதிய இந்தியா உருவாக்குவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் பிரதமர் மோடி


2022-க்குள் புதிய இந்தியா உருவாக்குவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 9 Aug 2017 6:40 PM GMT (Updated: 9 Aug 2017 6:40 PM GMT)

2022-க்குள் புதிய இந்தியா உருவாக்குவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்  நாடு முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரசிங் மூலம் உரையாற்றினார். சுதந்திர தினம், மாவட்டங்களின் வளர்ச்சி நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஆட்சியாளர்கள் தங்கள் மாவட்டங்களில் வரும் 2022-க்குள் புதிய இந்தியா உருவாக்குவதற்கு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே பல சமயங்களில் அரசின் திட்டங்கள் தோல்வியடைகின்றன. பீம் செயலின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்கள் தலைமை பண்பை ஏற்கும் போது இலக்கை அடைவது உறுதி. மாவட்ட ஆட்சியாளர்கள்  மாவட்டத்தின் பிரதிநிதி. ஆட்சியாளர்கள் மாவட்டங்களில் உள்ள ஊர்களை நேரில் சென்று பார்வையிட வேண்டும். குறைபாடுகள் களையவேண்டும்.அரசின் சேவைகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story