டெல்லியில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இருவர் கைது


டெல்லியில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இருவர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2017 9:36 AM GMT (Updated: 10 Aug 2017 9:36 AM GMT)

புதுடெல்லியில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


புதுடெல்லி,


நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் இருவரை சிறப்பு படை போலீஸ் கைது செய்து உள்ளது. இருவருக்கும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட செயத் முகமது ஜிஸ்கான் அலிக்கு அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பு உள்ளது என சிறப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2015ம் ஆண்டு மூன்று அல்-கொய்தா பயங்கரவாதிகளை போலீஸ் கைது செய்தது, இதனையடுத்து ஜிஸ்கான் அலியை போலீஸ் தேடிவந்தது. சவுதி அரேபியாவில் இருந்து டெல்லி திரும்பியதும் முகமது ஜிஸ்கான் அலியை போலீஸ் கைது செய்து உள்ளது. இரண்டாவது சம்பவம் டெல்லி சிறப்பு படை போலீஸ் 25 வயது ராஜா-உல்-அகமதுவை கைது செய்து உள்ளது. 

மேற்கு வங்காள மாநில போலீஸ் கொடுத்த உள்ளீட்டை அடுத்து டெல்லி போலீஸ் அதிரடியாக ராஜா-உல்-அகமதுவை கைது செய்தது. ராஜா-உல்-அகமதுவை போலீஸ் கடந்த வாரம் கைது செய்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வங்காளதேச கிளையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

Next Story