மதராஸாக்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தவும் வீடியோ எடுக்கவும் உபி அரசு உத்தரவு


மதராஸாக்களில்  கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தவும் வீடியோ எடுக்கவும் உபி அரசு உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2017 10:44 AM GMT (Updated: 11 Aug 2017 10:44 AM GMT)

உத்தரபிரதேசத்தில் சுதந்திர தினத்தின் போது மாநிலத்தில் உள்ள மதராஸாக்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.

லகனோ

உத்தரபிரதேசத்தில் சுதந்திர தினத்தின் போது  மாநிலத்தில் உள்ள  மதராஸாக்களில்  கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும்  இந்த நிகழ்ச்சிகளை  சான்றுக்காக வீடியோ மற்றும் புகைபடம் எடுக்கவும்  உத்தரவிட்டு உள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள மதராஸாக்கள்  சுதந்திர தினத்தில் ஆண்டு தோறும் கொடியேற்றி தேசிய கீதம் பாடுவது  வழக்கம் . ஆனால் இந்த ஆண்டு, மாநில அரசு ஒரு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தவும்  விரும்புகிறது.

இது தொடர்பாக மதராஸாக்கள் சிக்ஷா பரிஷத்  ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் இந்தியாவின் சுதந்திர போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கலாசார நிகழ்வை ஏற்பாடு செய்ய அனைத்து மதராஸங்களுக்கும் கட்டாயப்படுத்தபட்டு உள்ளது. அனைத்து  மதராஸாக்களிலும் நடைபெறும்  நிகழ்ச்சிகளை வீடியோவாக  எடுக்க அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய கீதம் பாடுவதும்   கொடியேற்றுவதும்   காலை 8 மணியளவில் நடைபெறும் என்று சுற்றறிக்கை கூறுகிறது. அடுத்து, இந்தியாவின் சுதந்திர போராட்டம் குறித்து  பேச வேண்டும். கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்  தேசிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

சில விளையாட்டு நிகழ்வுகள் திட்டமிடலாம்  பிறகு   இனிப்புகளை விநியோகம் செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளதாக இந்திய எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

Next Story