உ.பி. அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றக்குறையால் இரு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
கோரக்பூர்,
கோரக்பூரில் உள்ள பிஆர்டி மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றக்குறையால் இரு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜீவ் ராவுத்லே கூறிஉள்ளார். ஆக்ஸிஜன் பற்றக்குறை பணம் செலுத்துதல் விவகாரத்தினால் ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கோரக்பூர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கும் பிஆர்டி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனுக்கான கட்டணத் தொகை ரூ. 67 லட்சம் வழங்கப்படததால் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது. கோரக்பூர் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பாராளுமன்றத் தொகுதியாகும்.
Related Tags :
Next Story