அருணாச்சலப் பிரதேசம்: பழங்குடியினர் பண்பாட்டை பாதுகாக்க தனித்துறை அமைப்பு


அருணாச்சலப் பிரதேசம்: பழங்குடியினர் பண்பாட்டை பாதுகாக்க தனித்துறை அமைப்பு
x
தினத்தந்தி 12 Aug 2017 11:07 AM GMT (Updated: 12 Aug 2017 11:07 AM GMT)

பழங்குடியினர் பண்பாட்டை பாதுகாக்க தனித்துறை ஒன்றை அருணாச்சலப் பிரதேச அரசு அமைக்க அனுமதியளித்துள்ளது.

இடாநகர்

இது பற்றி முதல்வர் பேமா காண்டு கூறுகையில் உலகமயமாக்கலினாலும், வெளிக்கலாச்சார செல்வாக்கினாலும் பழங்குடியினர் தங்களது வளமான பாரம்பரியக் கலாச்சாரம் மற்றும் மொழிகளிலிருந்து தொடர்பின்றி போகின்றனர். இச்சூழல் அவர்கள் முற்றிலுமாக மாறிப்போவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் முதல்வர்,

”மாறி வரும் உலகில் இவர்களின் பண்பாட்டுத் தொன்மங்களை பாதுகாக்க தனித்துறையை உருவாக்குவது அவசியமாகிறது. இதர நாடுகளில் எப்படி உள்நாட்டு பழங்குடியினர் தங்களது அடையாளங்களை இழந்தது போன்று இங்கும் நடக்கக்கூடாது” என்றார் முதல்வர் காண்டு.

இத்துறைக்காக ஏழு பதவிகளையும் உருவாக்க அமைச்சரவை அனுமதி கொடுத்துள்ளது. இதில் இயக்குநர் ஒருவரும் அடங்குவார். இத்துறைக்கு செயலர் ஒருவர் தலைமை வகிப்பார். பழங்குடியினரின் உள்ளூர் மொழிகள், எழுத்துருக்கள், இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக்கலை, நாட்டுப்புறக்கதைகள், பழமொழிகள் மற்றும் பூசாரிகளின் மந்திரங்கள் போன்றவற்றை பிரபலப்படுத்தவும் இத்துறை செயலாற்றும் என்று கூறப்படுகிறது.


Next Story