காஷ்மீர்:பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்


காஷ்மீர்:பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்
x
தினத்தந்தி 12 Aug 2017 3:17 PM GMT (Updated: 12 Aug 2017 3:17 PM GMT)

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கே.ஜி.பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்தார்.

புதுடெல்லி,

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கே.ஜி.பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்துடனான நடந்த  துப்பாக்கிச்சண்டையில் இந்திய வீரர் ஜக்ராம் சிங் தோமர் வீரமரணம் அடைந்தார்.

Next Story