மத்திரி சபையில் இடமளிக்கப்படாததால் சிவசேனா கோபம், விழாவை புறக்கணித்தது


மத்திரி சபையில் இடமளிக்கப்படாததால் சிவசேனா கோபம், விழாவை புறக்கணித்தது
x
தினத்தந்தி 3 Sep 2017 5:57 AM GMT (Updated: 3 Sep 2017 5:57 AM GMT)

மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது, ஆனால் அதனுடைய நீண்ட நாள் கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு இடம் கிடைக்கவில்லை.


புதுடெல்லி,

மத்திய மந்திரிசபையில் சிவசேனா சார்பில் தற்போது ஆனந்த் கீதே மட்டும் அமைச்சராக உள்ளார். இதனால் சிவசேனாவுக்கு கூடுதலாக 2 இடங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் ஒருவருக்கு காபினெட் அந்தஸ்துடன் கூடிய மத்திய மந்திரி பதவி வழங்கப்படும்  என்று தகவல் வெளியானது. ஆனால் இன்று நடந்த மத்திய மந்திரி விரிவாக்கத்தில் சிவ சேனாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் சிவசேனா கட்சி தலைவர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். இன்று அவர்கள் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மக்களவையில் சிவசேனாவிற்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். 

Next Story