புதியதாக பதவி ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


புதியதாக பதவி ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 3 Sep 2017 9:47 AM GMT (Updated: 3 Sep 2017 9:47 AM GMT)

மத்திய அமைச்சரவையில் புதியதாக பதவி ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றது. அதன் பிறகு முதன் முதலாக அந்த ஆண்டு நவம்பர் மாதம் 9–ந் தேதி பிரதமர் மோடி தனது மந்திரிசபையை விரிவுபடுத்தினார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 5–ந் தேதி மந்திரிசபையை மாற்றி அமைத்தார். 3–வது முறையாக இன்று தனது மந்திரிசபையை மாற்றி அமைத்தார்.

9 பேரை புதியதாக அமைச்சரவைக்கு மத்திய அரசு கொண்டு வந்தது. தர்மேந்திர பிரதான், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகிய 4 இணை அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். 

இந்தநிலையில் புதியதாக பதவி ஏற்றுக்கொண்ட 9 மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடு டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

புதிய மந்திரிகளின் அறிவும், அனுபவமும், மத்திய அமைச்சரவையின் மகத்தான மதிப்பை அதிகரிக்க செய்யும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story