யோகி உத்தரபிரதேச மாநிலத்தை நோயாளியாக்கிவிட்டார் காங்கிரஸ் தாக்கு

யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச மாநிலத்தை நோயாளிக்கிவிட்டார் என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் மாநிலத்தில் பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து மீண்டும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது. ஒட்டுமொத்த மாநிலத்தையும் நோயாளியாக்கிவிட்டார் என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் பேசுகையில், பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அவருக்கு நேரடியான பொறுப்பு உள்ளது. மாநிலத்தில் உள்ள முதல்-மந்திரியால் அரசை சரியாக நடத்த முடியவில்லை. முதல்-மந்திரியை விரைவில் மாற்ற வேண்டும். இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், குழந்தைகள் வாக்காளர்கள் இல்லை என நீங்கள் உணர்ச்சியற்று இருப்பது போன்றது. இந்த சோக சம்பவத்தை அடுத்தும் முதல்-மந்திரி மதுராவில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அங்கு செல்ல உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நண்பரை பார்க்க விமானத்தில் செல்கிறார், ஆனால் மக்களை சந்திக்க அவருக்கு நேரம் கிடையாது, என விமர்சனம் செய்தார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா பேசுகையில், ஆதித்யநாத் ஒட்டு மொத்த மாநிலத்தையும் நோயாளியாக்கிவிட்டார், பாரதீய ஜனதா தொடர்ச்சியாக இதனை புறக்கணித்தே வருகிறது. மீண்டும் உடலை நடுங்க செய்யும் சம்பவமான 49 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வெளியே தெரியவந்து உள்ளது. உயிரையே உலுக்கிவிடும் சம்பவம், குழந்தையை இழந்த பெற்றோர்கள் மீதே எங்களுடைய எண்ணங்கள் உள்ளது என கூறிஉள்ளார். பா.ஜனதா ஆட்சி செய்யும் அண்டைய மாநிலங்களையும் காங்கிரஸ் விமர்சித்து உள்ளது.
Related Tags :
Next Story