துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயற்சித்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு


துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயற்சித்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 5 Sep 2017 5:41 AM GMT (Updated: 5 Sep 2017 5:41 AM GMT)

துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயற்சித்த 8 வயது சிறுவன் உயிரிழப்புகாசியாபாத்,

சிறுவன் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக விசையை அழுத்தியதால் குண்டு பாய்ந்து உயிரிழந்தான்.
 
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க விரும்பிய 8 வயது சிறுவன் செல்போனில் கிளிக் செய்வதற்கு பதிலாக எதிர்பாராத விதமாக துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் குண்டு தலையில் பாய்ந்து உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவன் ஜுனைத் என அடையாளம் காணப்பட்டு உள்ளான். சிறுவனுடைய நண்பர்களும் செல்பி எடுத்து உள்ளனர். இதனையடுத்து சிறுவன் ஜுனைத்தும் செல்பி எடுக்க முயற்சித்த போது இச்சம்பவம் நேரிட்டு உள்ளது. 

சிறுவன் ஜுனைத்தின் அண்டைய வீட்டுக்காரர் காலே சட்டவிரோதமாக துப்பாக்கியை கொண்டிருந்ததாக தெரிகிறது. 

இதனைக் கொண்டே சிறார்கள் செல்பி எடுத்து உள்ளனர் எனவும் தெரியவந்து உள்ளது. 

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என சிறார்கள் செல்பி எடுத்து உள்ளனர் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்த காலேவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. 


Next Story