கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய அபுதாபி விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சென்றது


கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய அபுதாபி விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சென்றது
x
தினத்தந்தி 5 Sep 2017 10:45 PM GMT (Updated: 5 Sep 2017 9:08 PM GMT)

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737-800’ ரக விமானம் 102 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 6 பேருடன் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டது.

கொச்சி,

இந்த விமானம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க வந்தது. அப்போது அங்கு கனமழை பெய்து கொண்டிருந்தது. விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி நின்றது.
அப்போது தரையிறங்கிய அபுதாபி விமானம், பயணிகளை இறக்கிவிடும் இடத்திற்கு சென்றபோது அதன் முன் பக்க சக்கரம் நீரில் சிக்கி சறுக்கியது. இதனால் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சென்றது. இது பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தினார். அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர்.

Next Story