ஒரே நாளில் இரண்டு ரெயில்கள் தடம் புரண்டது

உத்தரபிரதேசம், டெல்லியில் இன்று ஒரே நாளில் இரண்டு ரெயில்கள் தடம் புரண்டு உள்ளன. ஆனால் இதில் யாருக்கும் காயம் இல்லை.
புதுடெல்லி
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூருக்கு ஷக்திகுஞ்ச் விரைவு ரெயில் நேற்று மதியம் புறப்பட்டது. அந்த விரைவு ரெயில் இன்று காலை உத்திரப்பிரதேசம் மாநிலத்தை அடைந்தது. ஓபுரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் சோன்பத்ரா பகுதியில் வந்தபோது, அந்த ரெயிலின் 7 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.
இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சக செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா கூறுகையில், ஹவுராவில் இருந்து ஜபல்பூர் செல்லும் விரைவு ரெயில் சோன்பத்ரா பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தடம்புரண்ட ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் நலமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரெயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி யில் டெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இன்று காலை டெல்லியில் சிவாஜி ரெயில்வே பாலம் அருகில் சென்றபோது திடீரென்று ரெயில் தடம் புரண்டது. இதில் என்ஜினும் அதனையடுத்த ஜெனரேட்டர் பெட்டியும் தண்டவாளத்தில் இருந்து விலகி ஓடி நின்றது. இந்த விபத்தில் பயணிகள் யாருக் கும் காயம் இல்லை. மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story