தேவைப்படும் பட்சத்தில் இந்திய ராணுவம் எல்லையை தாண்டி எதிரிகள் மீது போர் தொடுக்கும் வடக்கு மண்டல ராணுவ தளபதி

தேவைப்படும் பட்சத்தில் எதிரிகள் மீது இந்திய ராணுவம் போர் தொடுக்கும் என வடக்கு மண்டல ராணுவ தளபதி லெப்டினன்ட் கர்னல் தேவராஜ் அன்பு கூறியுள்ளார்.
உதம்பூர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் வடக்கு மண்டல ராணுவ தளபதி தேவராஜ் அன்பு கூறியதாவது:
இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் எல்லையை தாண்டி எதிரிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சர்ஜிக்கல் ஆப்ரேஷனில் பாகிஸ்தானில் 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவ முயற்சிகளை மேற்கொண்ட போதும் இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை சதி செயலை முறியடித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேவராஜ் அன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி வடக்கு மண்டல ராணுவ தளபதியாக பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இருமுனை போருக்கு தயாராக வேண்டும். முப்படைகளில் ராணுவத்தின் முன்னுரிமை நீடிக்க பாடுபட வேண்டும் எப டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story