அயோத்தியாவில் ராம்லீலா நடத்தும் இந்தோனேஷிய முஸ்லிம்கள்

இராமாயண காவியம் மத மற்றும் மொழியை மட்டும் கடந்ததல்ல எல்லைகளையும் கடந்ததாகும்.
லக்னோ
இந்தோனேஷியாவின் ராம்லீலா சமிதி எனும் அமைப்பு ராமாயண காட்சிகளை விரைவில் அயோத்தியாவிலும், லக்னோவிலும் நடித்துக்காட்டும் என்று உத்தரபிரதேச கலாச்சாரத் துறை அமைச்சர் லஷ்மி நாராயண் சவுத்திரி. வரும் செப்டம்பர் 13 முதல் 15 வரை இக்காட்சிகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
“இதை நிகழ்த்தும் அனைவரும் முஸ்லிம்கள். அவர்கள் இறைச்சி உண்ண மாட்டார்கள்; எவ்விதமான வன்முறையிலும் நம்பிக்கையற்றவர்கள்” என்றார் அவர். இது மாதிரியான ராம்லீலா மாநிலத்தில் நிகழ்வது இதுவே முதல்முறை என்றார் அவர். இதன் மூலம் கலாச்சார இணைப்பு ஏற்படுகிறது என்றார் அவர். “இந்தோனேஷியா இஸ்லாமிய நாடு, அவர்களுக்கு ராம்லீலாவில் எவ்வித பிரச்சினையுமில்லை” என்றார் அவர்.
உலகில் 65 நாடுகளில் நிகழ்த்தப்படும் ராம்லீலா அயோத்தியாவின் ராம்நகரியில் நிகழ்த்தப்பட வேண்டும் என்றார் அமைச்சர். இந்தியாவில் ராமாயண நாடகம் 100 ற்கும் மேற்பட்ட வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது.
Related Tags :
Next Story