பிரபல கன்னட நடிகர் ஆர்.என் சுதர்சன் காலமானார்


பிரபல கன்னட நடிகர் ஆர்.என் சுதர்சன் காலமானார்
x
தினத்தந்தி 8 Sep 2017 2:22 PM GMT (Updated: 8 Sep 2017 2:21 PM GMT)

பிரபல கன்னட நடிகர் ஆர்.என். சுதர்சன் (வயது 78)உடல்நலக்குறைவால் பெங்களூரில் காலமானார்.

பெங்களூர்,

தமிழ்,தெலுங்கு, கன்னடம், உள்ளி மொழிகளில் நடித்த ஆர்.என்.சுதர்சன் கடந்த சில மாதங்களாக  உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தமிழில் தீர்ப்பு, சுமதி என் சுந்தரி, நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் வலம் வந்தார். ஆர்.என். சுதர்சன்  ஆர்.நாகேந்திர ராவின் நான்காவது மகன் ஆவார். இவரது மறைவிற்கு கன்னட நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Next Story