ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து ஒருமித்த கருத்து வேண்டும் - அமைச்சர் நக்வி


ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து ஒருமித்த கருத்து வேண்டும் - அமைச்சர் நக்வி
x
தினத்தந்தி 9 Sep 2017 11:08 AM GMT (Updated: 9 Sep 2017 11:08 AM GMT)

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவாக ஒருமித்த கருத்து ஏற்பட மத்திய அமைச்சர் நக்வி வேண்டுகோள் விடுத்தார்.

பட்னா

உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஒவ்வொரு 5 அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அப்போது வளர்ச்சி செயல்பாடுகள் முடங்கி விடுகின்றன. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் இந்த வேலைகள் நின்று போகின்றன. தேர்தல்களால் 30 முதல் 40 சதவீத வளர்ச்சி வேலைகள் நின்று போவதுடன் அவை நீண்ட காலத்திற்கு தள்ளிப்போகின்றன. 

ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் ஏராளமான செலவு மிச்சமாகும். அரசு வளர்ச்சி வேலைகளை தொடர்ந்து செய்ய போதுமான நேரம் கிடைக்கும். 

தேர்தல் வழிமுறைகள், நடத்தை விதிமுறைகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்த அனைத்து அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் மற்றும் சிந்தனையாளர்கள் ஆகியோர் ஒருமித்தக் கருத்தைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்றார் நக்வி.


Next Story