பரோல் நிபந்தனையில் உள்நோக்கம் இல்லை: மைத்ரேயன் எம்.பி பேட்டி


பரோல் நிபந்தனையில் உள்நோக்கம் இல்லை: மைத்ரேயன் எம்.பி பேட்டி
x
தினத்தந்தி 7 Oct 2017 8:26 AM GMT (Updated: 7 Oct 2017 8:26 AM GMT)

சசிகலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள பரோல் நிபந்தனையில் உள்நோக்கம் இல்லை என்று மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

அ.தி.மு.க. மேல்சபை எம்.பி. மைத்ரேயன் இன்று காலை கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். கவர்னர் மாளிகையை விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மைத்ரேயன் எம்.பி. கூறியதாவது:- தனிப்பட்ட காரணத்துக்காக சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அரசியல் சூழ்நிலைக்காக மட்டுமே சசிகலாவுக்கு நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது. அவர் பரோலில் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது.

இரட்டை இலை விவகாரத்தில் அடுத்த வெள்ளியன்று தினகரன் தரப்பு வாதம் தொடங்கும். போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கும் பணி நடந்து வருகிறது.டெங்கு காய்ச்சல் மரணத்துக்கு அரசு காரணமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story