ஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்து காலி பெட்டி வந்ததாக 166 முறை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது


ஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்து காலி பெட்டி வந்ததாக 166 முறை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2017 8:51 AM GMT (Updated: 11 Oct 2017 8:51 AM GMT)

ஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்து. காலி பெட்டி வந்ததாக ஏமாற்றி 166 முறை பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி

 வடக்கு டெல்லி  ட்ரி நகரை சேர்ந்தவர்  ஷிவம் சோப்ரா . ஓட்டல் மேலாண்மை படித்து உள்ளார். கடந்த வாரம் இவர் கைது செய்யப்பட்டார். இவர் போலி முகவரி மூலம் ஆன் லைனில் விலை உயர்ந்த  போன்களை வாங்குவார் பின்னர் தனக்கு பார்சலில்  போன்கள் வரவில்லை. காலி பெட்டிகள் தான் வந்து உள்ளன  எனக்கூறி அந்த நிறுவனங்களில் இருந்து  பணத்தை திரும்ப பெறுவார். இவ்வாறு இவர் 166 முறை பணம் திரும்ப பெற்று உள்ளார்.

சுமார் ரூ. 54 லட்சம் இவ்வாறு மோசடி செய்து உள்ளதாக ஆன் லைன் நிறுவனம் ஒன்று இவர் மீது புகார் அளித்து உள்ளது. இதை தொடர்ந்து  போலீசார் இவரை கண்காணித்து பின்னர் கைது செய்து உள்ளனர்.

சோப்ரா 141 சிம் கார்டுகளையும் 50 இமெயில் முகவரிகளையும் பயன்படுத்தி வந்து உள்ளார்.அது போல் ஆன் லைனில் பல போலி கணக்குகளை உருவாக்கி வைத்துள்ளார்.

Next Story