தன்னை சிறையிலடைக்க காங்கிரஸ் கட்சியினர் சதி பிரதமர் மோடி குற்றசாட்டு

குஜராத் மாநில முதல்மந்திரியாக இருந்தபோது தம்மை சிறையிலடைக்க காங்கிரஸ் கட்சியினர் சதி செய்ததாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் பட் கிராமத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
சாதியம், மதவாதம் குறித்து விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி, வளர்ச்சி முழக்கத்தை முன்வைத்து தங்களுடன் தேர்தலை சந்திக்கத் தயாரா?. எதிர்மறை சிந்தனையே காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறது.
குஜராத்தை சேர்ந்த தலைவர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்துள்ளதாகவும், முதலமைச்சராக இருந்தபோது தம்மை சிறையிலடைக்க காங்கிரஸ் கட்சியினர் சதி செய்ததாகவும் குற்றம்சாட்டினார். குஜராத்தில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பிரதமர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்.
Related Tags :
Next Story