100 அடி உயர ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை பரிசாக வழங்க -இஸ்லாமிய ஷியா வாரியம் விருப்பம்


100 அடி உயர ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை பரிசாக வழங்க -இஸ்லாமிய ஷியா வாரியம் விருப்பம்
x
தினத்தந்தி 17 Oct 2017 12:06 PM GMT (Updated: 17 Oct 2017 12:06 PM GMT)

சரயு நதிக்கரையின் ஓரத்தில் அமைக்கப்படும் 100 அடி உயர ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை பரிசாக வழங்க உத்தர பிரதேச மாநில இஸ்லாமிய ஷியா வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

உ.பி., மத்திய ஷியா வாரியத் தலைவர் வாசீம் ரிஸ்வி கூறியதாவது:-

தாஜ் மஹால் அன்பின் சின்னமாக இருக்கலாம், ஆனால் வணக்கத்திற்கான சின்னம்  அல்ல, 1-2 தவிர பெரும்பாலான முகலாயர்கள் சிலிகள் உள்ளன  முஸ்லிம்கள் அவற்றை விக்ரகங்களாக என்று கருதுவதில்லை.

மாயாவதி தனது சொந்த சிலைகளை கட்டியபோது யாரும் அதை எதிர்க்கவில்லை ராம் சிலை வைக்கப்படுவது குறித்து ஏன் பிரச்சினை எழுப்பபடுகிறது என எனக்கு புரியவில்லை. 

ராம் சிலை கட்டுமானம் எதிர்க்கப்படுவது குறித்து வருத்தம் தருகிறது. என கூறினார் 

உ.பி., மத்திய ஷியா வாரியத் தலைவர் வாசீம் ரிஸ்வி, முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்  சரயு நதிக்கரையின் ஓரத்தில் அமைக்கப்படும் 100 அடி உயர ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை பரிசாக வழங்க உத்தர பிரதேச மாநில இஸ்லாமிய ஷியா வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

Next Story