வாழ்க்கையில் வெற்றி பெற இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் அசாம் முதல்-மந்திரி பேச்சு

வாழ்க்கையில் வெற்றி பெற இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற 55 மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மாணவர்கள் வெற்றி அடைய நியாயற்ற வழிமுறைகளை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும். வெற்றிக்கு குறுகிய காலம் ஏதும் இல்லை. வாழ்க்கையில் வெற்றிக்கரமாக இருக்க மாணவர்கள் சிறந்த முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விஉதவித்தொகை ரூ.50,000-ஆயிரத்தில் இருந்து ரூ,1,25,000 வரை உயர்த்தப்படும் என அறிவித்தார்.
Related Tags :
Next Story