டெல்லியில் மத்திய மந்திரியுடன், அமைச்சர் பாண்டியராஜன் சந்திப்பு


டெல்லியில் மத்திய மந்திரியுடன், அமைச்சர் பாண்டியராஜன் சந்திப்பு
x
தினத்தந்தி 13 Nov 2017 11:35 PM GMT (Updated: 13 Nov 2017 11:34 PM GMT)

தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று மத்திய கலாசாரத்துறை மந்திரி மகேஷ் சர்மாவை டெல்லியில் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று மத்திய கலாசாரத்துறை மந்திரி மகேஷ் சர்மாவை டெல்லியில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் வலியுறுத்தினேன். மேலும் தமிழக தொல்லியல் துறை இடங்களை சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசு போதுமான உதவி மற்றும் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்’ என்றார்.

தமிழகத்தில் புராதன சின்னங்களை அரசு உரிய அளவில் பாதுகாத்து வருவதாக கூறிய பாண்டியராஜன், தமிழ் கலாசாரம் உலகளாவியது எனவும் தமிழின் தொன்மை பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story