துப்பாக்கி சூடு பட்டும் ஏடிஎம் பணத்தை கொள்ளையடிக்கவிடாமல் தடுத்த காவலாளி


துப்பாக்கி சூடு பட்டும் ஏடிஎம் பணத்தை கொள்ளையடிக்கவிடாமல் தடுத்த காவலாளி
x
தினத்தந்தி 16 Nov 2017 12:31 PM IST (Updated: 16 Nov 2017 12:31 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஏடிஎம் காவலாளி துப்பக்கியால் சுடப்பட்டாலும் கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை துணிச்சலாக தடுத்துள்ளார்.

புதுடெல்லி

டெல்லியின் உள்ள மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம்மில் ஹெல்மெட் அணிந்த இரண்டு கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்தனர்.

அப்போது பணியிலிருந்த காவலாளி அவர்களைத் திருட விடாமல் தடுத்துள்ளார். அப்போது கொள்ளையர்கள் அந்தக் காவலாளியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.காயமடைந்த காவலாளி, தொடர்ந்து அவர்களைத் திருட விடாமல் தடுத்துள்ளார்.

இதனால், கொள்ளையர்கள் திருடமுடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் உடனே அங்கு வந்து காவலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 More update

Next Story