சத்திஸ்கரில் நக்சலைட்டுகளுடன் நடைபெற்ற தாக்குதலில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்


சத்திஸ்கரில் நக்சலைட்டுகளுடன் நடைபெற்ற தாக்குதலில்  7 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 16 Nov 2017 2:52 PM GMT (Updated: 16 Nov 2017 2:51 PM GMT)

சத்திஸ்கரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் சத்திஸ்கர்-ஜார்கண்ட் மாநில எல்லையில் உள்ள பல்ராம்பூர் மாவட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக சத்தீஸ்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து சத்திஸ்கர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது மறைந்து இருந்த நக்சலைட்டுகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி கையெறி குண்டுகளை வீசியும், துபாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தின. உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரகள் போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story