மாநில பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டியது அவசியம் நிதிஷ்குமார்


மாநில பொருளாதார வளர்ச்சிக்கு  விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டியது அவசியம் நிதிஷ்குமார்
x
தினத்தந்தி 17 Nov 2017 3:09 PM GMT (Updated: 17 Nov 2017 3:09 PM GMT)

மாநில பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

பாட்னா,

கூட்டுறவுத்துறையை ஊக்குவிக்கபதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதிஷ் குமார் கூறியிருப்பதாவது:

மாநில பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டியது அவசியம்.  மாநில விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதே எங்கள் விவசாய திட்டத்தின் இலக்காகும். 

நமது மக்கள் தொகையில் 76 சதவீத பேர் வேளாண்மை சார்ந்து இருப்பதால்  இது அவசியமாகிறது. 

விவசாயிகளின் வருமானம் உயர்ந்தால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படும்.  விவசாயத்தில் முன்னேற்றத்திற்கான கூட்டுறவு துறையின் வளர்ச்சி அவசியம்.

மாநிலத்தில் புறக்கணிப்பட்ட விவசாய பொருட்களை வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  நாம் தானிய உற்பத்தியில் தன்னிறைவுள்ளவர்களாக உள்ளோம். 

கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு  வழங்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இயற்கை உரங்கள் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நாங்கள் சிறப்பு சலுகைகளை அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story