குஜராத் தேர்தல்: பாரதீய ஜனதாவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு டிசம்பர் 14-ல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட வாக்குகளும் முடிந்த பின் டிசம்பர் 18-ந் தேதி முடிவுகள் வெளியிடப்படும். இங்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 21 ஆகும். அரசியல் கட்சிகள் இங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. பிரதமர் மோடியும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் இங்கு முதல் கட்ட பிரசாரத்தை முடித்து உள்ளனர்.
இந்த நிலையில் பாஜக தனது முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 70 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றனர்.
குஜராத் முதல்வர் 'விஜய் ரூபானி' ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். குஜராத்தின் துணை முதல்வர் நிதின் பட்டேல் 'மேஹ்சேனா' தொகுதியில் போட்டியிடுகிறார். குஜராத் மாநில பாஜக தலைவர் ஜீத்து வாகினி தற்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் அதே 'பாவ் நகர்' தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், அக்கட்சி 36 வேட்பாளர்கள் அடங்கிய 2வது கட்ட பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது.
இதனால் மொத்தமுள்ள 182 உறுப்பினர்களில் 106 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story