அசாமில் பரிதாபம் ரெயில் மோதி 5 யானைகள் பலி


அசாமில் பரிதாபம் ரெயில் மோதி 5 யானைகள் பலி
x
தினத்தந்தி 10 Dec 2017 5:21 PM GMT (Updated: 10 Dec 2017 5:21 PM GMT)

அசாமில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது 5 யானைகள் ரெயில் மோதி பலியானது.

கவுகாத்தி, 

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள ரங்கப்பரா என்ற வனப்பகுதியில் யானைகள் கூட்டம் ஒன்று தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கவுகாத்தி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக வந்தது.

யானைகள் கூட்டம் தண்டவாளத்தை கடப்பதை கண்ட ரெயில் டிரைவர் உடனடியாக பிரேக்போட்டு ரெயிலை நிறுத்தினார். ஆனாலும் ரெயில் மோதியதில் 5 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இந்த விபத்து காரணமாக அந்த ரெயில் 6 மணி நேரம் தாமதமாக சென்றது.



Next Story