கூகுளில் அதிகம் தேடப்பட்ட வாசகம் பாகுபலி 2 தி கன்குலூசன்

கூகுளில் இந்த வருடத்தின் அதிகம் தேடப்பட்ட வாசகமாக பாகுபலி 2 தி கன்குலூசன் உள்ளது.
புதுடெல்லி,
கூகுள் தேடுதல் இயந்திரத்தில் ஒவ்வொரு வருடமும் அதிகம் தேடப்படும் வாசகம் பற்றி அறிவிப்பு வெளியிடப்படுவது உண்டு. இந்த வருடம் டிரென்டிங் ஆக உள்ள வாசகம் அடங்கிய பட்டியல் இன்று வெளியானது.
அதில், ராஜமவுலி இயக்கிய, பாக்ஸ் ஆபீசில் பல சாதனைகளை படைத்த பாகுபலி 2 தி கன்குலூசன் படம், அதிகம் தேடப்பட்ட வாசகங்களில் மொழிகளை கடந்து முதல் இடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் என்ற வாசகம் 2வது இடத்திலும், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் என்ற வாசகம் 3வது இடத்திலும் உள்ளன.
இந்த வருடத்திற்கான டாப் பொழுதுபோக்காளர்கள் வரிசையில் சன்னி லியோன் மீண்டும் முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆர்ஷி கான் மற்றும் சப்னா சவுத்ரி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் யூ டியூபில் வெளியான வித்யா வாக்ஸ் உள்ளது.
இதேபோன்று இந்த வருடத்திற்கான டாப் நியூஸ் வரிசையில், சி.பி.எஸ்.இ. முடிவுகள், உத்தர பிரதேச தேர்தல், ஜி.எஸ்.டி. மற்றும் பட்ஜெட் ஆகியவை உள்ளன.
இந்த வருடத்திற்கான எப்படி ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பது, ஜியோ போன் வாங்குவது, ஹோலி வண்ணத்தினை முகத்தில் இருந்து நீக்குவது போன்ற விசயங்கள் லட்சக்கணக்கானோரால் தேடப்பட்டு உள்ளன.