ஜம்மு மற்றும் காஷ்மீரில் பனிப்புயலில் சிக்கிய 3 பேர் மீட்பு


ஜம்மு மற்றும் காஷ்மீரில் பனிப்புயலில் சிக்கிய 3 பேர் மீட்பு
x
தினத்தந்தி 14 Dec 2017 12:47 PM GMT (Updated: 14 Dec 2017 12:47 PM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பனிப்புயலில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டார் கல்லா கணவாய் பகுதியில் இருந்து கத்துவா மாவட்டத்தில் உள்ள தங்களது இருப்பிடத்திற்கு 3 பேர் திரும்பி கொண்டு இருந்துள்ளனர்.  கணேஷ், ருமால் சந்த் மற்றும் குல்தீப் ஆகிய அந்த 3 பேரும் பஷோலி நெடுஞ்சாலை பகுதியில் பனிப்புயலில் சிக்கி கொண்டனர்.

பதர்வா பள்ளத்தாக்கு பகுதியில் கடும் பனிப்பொழிவினால் இந்த பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ராணுவ குழு மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.  அவர்களுடன் இந்திய விமான படை ஹெலிகாப்டர் ஒன்றும் இந்த பணியில் ஈடுபட்டது.

இந்த நிலையில் பனிப்புயலில் சிக்கி காணாமல் போன 3 பேரும் கலோ பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.  அதன்பின்னர் கத்துவா மாவட்டத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.


Next Story