புதுடெல்லி கான் மார்க்கெட்டுக்கு வெடி குண்டு மிரட்டல்


புதுடெல்லி கான் மார்க்கெட்டுக்கு வெடி குண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 15 Dec 2017 5:30 AM GMT (Updated: 15 Dec 2017 5:30 AM GMT)

புதுடெல்லி கான் மார்க்கெட்டில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக டெலிபோனில் மிரட்டல் வந்தது.

புதுடெல்லி

டெல்லி போலீசுக்கு இன்று காலை  6.50 மணிக்கு  கான் மார்க்கெட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக ஒரு மர்ம டெலிபோன் அழைப்பு வந்தது.  இதை தொடர்ந்து போலீசார், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் அந்த பகுதிக்கு சென்று சுமார் 2 மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து 9.15 மணிக்கு  இது வெடி குண்டு புரளி என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து டெல்லி துக்ளக் சாலை போலீஸ் நிலைய அதிகாரி கூறியதாவது:-

"கான் மார்க்கெட்டில் வெடி குண்டு வைக்கபட்டு இருப்பதாக  ஒரு டெலிபோன்  அழைப்பு வந்தது. ஆனால் அங்கு சோதனை நடத்தியதில் எதுவும் சிக்க வில்லை அதனால் அது புரளி என முடிவு செய்தோம் என கூறினார். 

Next Story