70 லட்சம் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது மம்தா பானர்ஜி


70 லட்சம் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 15 Dec 2017 6:37 AM GMT (Updated: 15 Dec 2017 6:37 AM GMT)

70 லட்சம் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் 70 லட்சம் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ”சபுஜ் சத்தி” திட்டத்தின் கீழ் இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்க மாநில அரசு பள்ளிகளில் 70 லட்சம் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ”சபுஜ் சத்தி” திட்டத்தின் கீழ் இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.   "2015 ஆம் ஆண்டில் சபுஜ் சத்தி திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் தற்போது எளிதாக சைக்கிளில் பள்ளிக்கு செல்கின்றனர். 

இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Next Story