கேரளாவை சேர்ந்த 5 ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு


கேரளாவை சேர்ந்த 5 ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Dec 2017 11:55 AM GMT (Updated: 17 Dec 2017 11:55 AM GMT)

கேரளாவை சேர்ந்த 5 ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து உள்ளது.


புதுடெல்லி,


கேரளாவின் கண்ணூரை சேர்ந்த 5 ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என தேசிய புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநில போலீஸ் முதலில் விசாரணை செய்து வந்த வழக்கை தன்வசம் எடுத்த தேசிய புலனாய்வு பிரிவு வழக்கை பதிவு செய்து உள்ளது. மித்ஹிலாஜ் (26), அப்துல் ரசாக் (34), ரஷீத் (24), மனாஃப் ரஹ்மான் (42), ஹம்சா (57) ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

Next Story