மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என பணியாளர்கள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. #blooddonation
புதுடெல்லி,
மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளிப்பது தொடர்பாக மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– ரத்த தானம் அல்லது ரத்த கூறுகள் (சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள்) தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க மத்திய பணியாளர் நல அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தக் கூறுகளை தானம் அளிக்கும் நாளன்று (ஒருநாள் மட்டும்) ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக இதுபோல் 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள இயலும். இதற்கு தானம் அளித்ததற்கான தகுந்த ஆதாரங்களை இணைப்பது அவசியம்’’.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
#blooddonation #Govtemployees
Related Tags :
Next Story