அரசு பஸ்சில் பயணம் செய்த கவர்னர் கிரண்பெடி


அரசு பஸ்சில் பயணம் செய்த கவர்னர் கிரண்பெடி
x
தினத்தந்தி 13 Jan 2018 7:15 PM GMT (Updated: 13 Jan 2018 6:49 PM GMT)

புதுவை கவர்னர் கிரண்பெடி வாரஇறுதி நாட்களில் ஆய்வு பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

புதுச்சேரி

புதுவை கவர்னர் கிரண்பெடி வாரஇறுதி நாட்களில் ஆய்வு பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று அவர் கவர்னர் மாளிகையில் இருந்து புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான குளுகுளு வசதி செய்யப்பட்ட பஸ்சில் அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிக்கு சென்றார். கனகன் ஏரிக்கு சென்ற அவர் அங்கு நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.

அதன்பின் ஏரியின் கரையில் நடைபாதை, மின் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டார். மேலும் அங்கு அமர்ந்து ஏரியை ரசிக்கும் விதமாக பெஞ்சுகள் அமைக்கவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஏரிப்பகுதியை சுத்தமாக பராமரிக்க அப்பகுதியில் வசிப்பவர்களை கொண்ட குழுவை அமைக்கவும் வலியுறுத்தினார்.


Next Story