கடந்த 24 மணி நேரத்தில் 3 சிறுமிகள் கொடுமையாக பாலியல் பலாத்காரம்

அரியான மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 சிறுமிகள் கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளனர். இதில் 2 பேர் கொலை செய்யபட்டு உள்ளனர்.
அரியானா பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள பிஞ்சூர் பகுதியில் ஞாயிற்றுகிழமை 11 வயது சிறுமி ஒருவர் மிக கொடூரமாக பாலியல் கொடுமை செய்யப்பட்டு உள்ளார். அவரது மர்ம பகுதியில் மரக்கட்டை செருகி சிறுமி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோர் உடனடியாக கல்கா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பஞ்ச்குலா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசார் 50 வயது நபரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது போல் பானிபட் மாவட்டத்தில் உர்லான மாவட்டத்தி 11 வயது சிறுமி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.அந்த பெண் முதலில் படுகொலை செய்யப்பட்டார், பின்னர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.அறிக்கைகள் படி, அவர்கள் சாட்சிகளை அழிக்க தனது ஆடைகளை எரித்தனர்.இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
இது போல் புதகேகேடா கிராமத்தில் 15 வயது சிறுமியின் சிதைந்த நிலையில் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கபட்டு உள்ளது. சிறுமியை 3 முதல் 4பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. கடுமையாக அவரது மர்ம உறுப்பு சிதைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story