5 நாட்களில் 5 பாலியல் பலாத்காரம்: அரியானா முதல்-மந்திரி கட்டார் மவுனம் கலைத்தார்


5 நாட்களில் 5 பாலியல் பலாத்காரம்: அரியானா முதல்-மந்திரி கட்டார் மவுனம் கலைத்தார்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:44 AM GMT (Updated: 17 Jan 2018 11:44 AM GMT)

அரியானாவில் 5 நாட்களில் 5 பாலியல் பலாத்கார சம்பவம் நேரிட்டது துரதிஷ்டவசமானது என முதல்-மந்திரி கட்டார் கூறிஉள்ளார். #CMKhattar


சண்டிகார். 

அரியானாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உள்பட 5 பாலியல் பலாத்கார சம்பவங்கள் 5 நாட்களில் நடந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மவுனம் கலைத்த அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், “இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவமாகும், என்னுடைய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்,” என்றார். “நாங்கள் காவல் துறை நிர்வாகத்தில் மாற்றங்களை கொண்டு வந்து உள்ளோம், சில அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்ளோம். ஏற்கனவே 100-க்கு அழைப்பு விடுக்கும் திட்டத்தை தொடங்கிவிட்டோம். ஆபத்தில் இருக்கும் பெண்கள் உடனடியாக காவல் துறைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 1090 என்ற திட்டத்தையும் விரைவில் தொடங்க உள்ளோம். இவ்விவகாரங்களை கவனத்தில் எடுப்போம். தேவையான ஆலோசனை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்,” என கூறிஉள்ளார் மனோகர் லால் கட்டார். 

அரியானாவில் கடந்த ஐந்து நாட்களில் குருக்சேத்ரா, பானிபேட், ஹிசார், ஜிந்த் மற்றும் பரிதாபாத் பகுதிகளில் 5 பாலியல் பலாத்காரம் நடந்து உள்ளது. இவ்விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு கட்டார் கோரிக்கையும் விடுத்து உள்ளார். 

Next Story