தலைமை தேர்தல் ஆணையர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்கிறது!


தலைமை தேர்தல் ஆணையர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்கிறது!
x
தினத்தந்தி 17 Jan 2018 4:12 PM GMT (Updated: 17 Jan 2018 4:12 PM GMT)

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர்களின் சம்பளம் இரு மடங்காக உயர உள்ளது. #ElectionCommission #supremecourt

புதுடெல்லி,

தலைமை தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரின் சம்பளம் இருமடங்காக உயர உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவதற்கான மசோதா ஒன்று நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, மாநிலங்களவையில் வருகிற பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

அங்கும் இந்த மசோதா நிறைவேறி ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாகி விட்டால், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் சம்பளம் ரூ.2.80 லட்சமாக (தற்போதைய சம்பளம் ரூ.1 லட்சம்) அதிகரிக்கும். சுப்ரீம் கோர்ட்டின் பிற நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் ரூ.2.50 லட்சமும் (ரூ.90 ஆயிரம்), ஐகோர்ட்டு நீதிபதிகள் ரூ.2.25 லட்சமும் (ரூ.80 ஆயிரம்) மாத சம்பளமாக பெறுவார்கள். 

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தின் அடிப்படையில், 3 தேர்தல் கமி‌ஷனர்களின் சம்பளமும் ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.தலைமை தேர்தல் ஆணையர்களுக்கும் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா வரும் 29-ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டால் 3 தலைமைதேர்தல் ஆணையர்கள் தற்போது பெறும் சளம்பளத்தைவிட இரு மடங்கு சம்பளம் பெறுவர்.  #ElectionCommission #supremecourtNext Story