ஜம்மு-காஷ்மீர் புல்மாவா போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 4 போலீசார் காயம்


ஜம்மு-காஷ்மீர் புல்மாவா போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 4 போலீசார் காயம்
x
தினத்தந்தி 19 Jan 2018 12:06 PM GMT (Updated: 19 Jan 2018 12:06 PM GMT)

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்மாவா போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர் இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். #Pulwama #CRPF

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்மாவா போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் கையெறிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 4 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

புல்மாவா போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறோம்.  இந்த பணியில் 182 சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Next Story