குஜராத் முன்னாள் முதல்-மந்திரி ஆனந்திபென் படேல் மத்திய பிரதேச கவர்னராக நியமனம்

குஜராத் முன்னாள் முதல்-மந்திரி ஆனந்திபென் படேல் மத்திய பிரதேச கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #MadhyaPradesh #Governor
புதுடெல்லி,
குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த மோடி பிரதமரானதும் அந்த பதவிக்கு ஆனந்திபென் பட்டேல் (வயது 74)அம்மாநில முதல்-மந்திரியாக கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற பின் குஜராத்தில் படேல்கள் இடஒதுக்கீடு போராட்டம், தலித்துக்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தது. அதனால் 2016-ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் குஜராத் கவர்னராக உள்ள ஓம் பிரகாஷ் கோலி 2016-ம் ஆண்டு முதல் மத்திய பிரதேச கவர்னர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார். தற்போது மத்திய பிரதேச மாநில கவர்னர் பதவி காலியாக உள்ளதால் அந்த பதவிக்கு ஆனந்திபென் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் மத்திய பிரதேச கவர்னராக பதவி ஏற்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு விவசாயின் மகள், குஜராத்தின் முதல் பெண் முதல்-மந்திரியாகவும், மத்திய பிரதேசத்தின் முதல் பெண் கவர்னராகவும் நியமனம் செய்யப்பட்டு இருப்பது. மாநிலத்தின் பெருமைக்குரிய ஒரு தருணமாகும் என்று குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் பாரத் பாண்டே டுவிட்டரில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story