காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் இந்திய தரப்பில் பதிலடி


காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் இந்திய தரப்பில் பதிலடி
x
தினத்தந்தி 20 Jan 2018 6:18 AM GMT (Updated: 20 Jan 2018 6:18 AM GMT)

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. #JammuAndKashmir #Pakistan

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு மாவட்டத்தின் ஆர்னியா, ஆர்.எஸ்.புரா செக்டார்கள், சம்பா மாவட்டத்தின் ராம்கர் மற்றும் கதுவா மாவட்டத்தின் ஹிராநகர் போன்ற செக்டார்களில் கடந்த 2 நாட்களாகவே பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்று மீண்டு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் இருந்தும் சரியான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று பாகிஸ்தான் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஆர்னியா செக்டாரின் சாய்குர்த் பகுதியை சேர்ந்த பச்னோ தேவி (வயது 50) என்ற பெண்ணும், ஆர்.எஸ்.புரா செக்டாரின் கோர்டனா பகுதியை சேர்ந்த சகில் (25) என்ற வாலிபரும் உயிரிழந்தனர். 

பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து காஷ்மீர் எல்லையோரத்தில் இயங்கி வரும் பள்ளிகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும்வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
  • chat