தனது கருத்திற்காக கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கோரிய மகாராஷ்டிர மந்திரி


தனது கருத்திற்காக கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கோரிய மகாராஷ்டிர மந்திரி
x
தினத்தந்தி 20 Jan 2018 9:58 AM GMT (Updated: 20 Jan 2018 9:58 AM GMT)

முக்கிய பதவிகளுக்கு நல்ல குணங்கள் கொண்ட நபரை கண்டறிவது கடினம் ஆக உள்ளது என கூறிய மகாராஷ்டிர மந்திரி பாரதீய ஜனதா தொண்டர்களிடம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.#Mumbai

மும்பை,

மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.  அவரது மந்திரி சபையில் வருவாய் துறை மந்திரியாக இருப்பவர் சந்திரகாந்த் பாட்டீல்.  இவர் பீட் மாவட்டத்தில் நடந்த ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.  அங்கு அவர் பேசும்பொழுது, பல்வேறு முக்கிய பதவிகளுக்கு நல்ல குணங்கள் கொண்ட நபரை கண்டறிவது கடினம் ஆக உள்ளது என கூறினார்.

இதனால் பாரதீய ஜனதா கட்சியில் பல்வேறு பதவிகளை பெற விரும்பும் தொண்டர்களுக்கு எதிராக பேசியுள்ளார் என கருதப்பட்டது.  இதனை தொடர்ந்து கட்சியின் தலைவர்கள் மட்டத்தில் இருந்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கட்சி தொண்டர்களின் உணர்வுகளை நான் புண்படுத்தவில்லை.  இதில் ஏதேனும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டால், நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என மந்திரி எழுத்துப்பூர்வ முறையில் பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து அவர், நாடு வேகமுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது.  புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.  தற்பொழுது, குணங்களை வளர்ப்பதே உண்மையான சோதனை ஆகும்.  முக்கிய பதவிகளுக்கு உயர்ந்த குணங்களை கொண்ட மனிதர்களை கண்டறிவது கடினம் ஆக உள்ளது.  உயர்ந்த மற்றும் நேர்மை குணங்களை கொண்ட நபர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை என அதில் தெரிவித்துள்ளார்.

#Mumbai #BJP


Next Story