வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறி டிராக்டரை வைத்து விவசாயியை ஏற்றிக்கொன்ற வங்கி ஏஜெண்ட்கள்


வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறி டிராக்டரை வைத்து விவசாயியை ஏற்றிக்கொன்ற வங்கி ஏஜெண்ட்கள்
x
தினத்தந்தி 22 Jan 2018 5:24 PM GMT (Updated: 22 Jan 2018 5:24 PM GMT)

உத்தர பிரதேசத்தில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கிய விவசாயியை கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறி வங்கி ஏஜெண்ட்டுகள் டிராக்டரை வைத்தே விவசாயியை ஏற்றிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. #UttarPradesh #Farmer

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞான்சந்த் (வயது 45) இவர் கடந்த 2015-ல் ஒரு தனியார் நிறுவனத்தில் டிராக்டர் வாங்குவதற்காக ரூபாய் 5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இன்னும் கட்ட வேண்டிய தொகை ரூபாய் 90,000 இருந்த நிலையில்,  முழு தொகையை கட்டவில்லை என்று கூறி லக்னோவில் உள்ள கடன் வசூல் செய்யும் ஏஜெண்ட்கள் டிராக்டர் வாங்கிய ஞான்சந்த்  விவசாயியிடம் டிராக்டர் சாவியை பிடிவாதமாக பறித்துக்கொண்டு டிராக்டரை ஓட்டி சென்றனர். 

விவசாயி ஞான்சந்த் எவ்வளவோ கெஞ்சி காலில் விழுந்து கதறியும் அவர்கள் டிராக்டரை எடுத்து சென்றுள்ளனர். டிராக்டரை எவ்வளவோ நிறுத்த முயன்ற விவசாயி கடைசியில் டிராக்டர் முன் திடீரென விழுந்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத கடன் வசூல் செய்யும் ஏஜெண்ட்கள் விவசாயின் மீது ஏறி இறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

பல்லாயிரக்கணக்கான குறைந்த வருமானம் வரும் விவசாயிகள் வங்கிகளில் கடன் மறுக்கபடும் போது அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களிடம் சென்று கடன்களை பெற்று இறுதியில் கடன் செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்ற சம்பவம் நடக்கின்றது.

Next Story