டெல்லி மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி


டெல்லி மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 April 2018 1:50 PM GMT (Updated: 13 April 2018 1:51 PM GMT)

டெல்லியில் அம்பேத்கர் நினைவகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக அலிபூர் ரோடுக்கு பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். #PMModi

புதுடெல்லி,

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா நாளை (ஏப்ரல் 14-ம் தேதி)  கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அம்பேத்கர் நினைவகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர் மோடி டெல்லி லோக் கல்யான் மார்க் மெட்ரோ நிலையத்தில் இருந்து 26, அலிபூர் ரோடுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அலுவலகம் நேரம் என்பதால் மெட்ரோ ரெயிலில் கூட்டம் அலைமோதியது.  

மாலை நேரத்தில் பொதுமக்களோடு மக்களாக பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அவருடன் பயணிகள் செல்பி எடுத்து கொண்டர். அப்போது பயணிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். தங்களுடன் பிரதமர் பயணிப்பதை கண்ட பயணிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.

Next Story