அருண் ஜெட்லி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்


அருண் ஜெட்லி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்
x
தினத்தந்தி 15 April 2018 7:40 AM GMT (Updated: 15 April 2018 7:40 AM GMT)

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மாநிலங்களவையில் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். #ArunJatley #Inauguration

புதுடெல்லி,

குடியரசு துணைத்தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு பாராளுமன்றத்தில் இன்று காலை நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு மாநிலங்களவை எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சமீபத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு எம்.பி.கள் நியமனம் செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நிதி மந்திரி அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களில் இருந்து போட்டியிட்ட பா.ஜ.க தலைவர்களான ஜி.வி.எல் நரசிம்ம ராவ், ஹர்நாத் யாதவ், அசோக் பாஜ்பாய், விஜய் பால் சிங் தோமர், காந்தா கர்தம், சாகல்தீப் ராஜ்பார் மற்றும் அனில் அகர்வால் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

முன்னதாக சிறுநீரக கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்ததால் அவரால் பதவியேற்க முடியவில்லை. உடல்நலம் குணமடைந்ததை அடுத்து அவர் இன்று காலை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.

Next Story